உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்கள் 82 பேருக்கு சித்தா படிப்பு?

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ், ஐந்து அரசு மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் உள்ள, 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 49 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள, 281 இடங்கள், மாநில அரசுக்கு உள்ளன. இதேபோல், 25 தனியார் கல்லுாரிகளில் உள்ள, 1,550 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 237 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு, 822 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 491 இடங்களும் உள்ளன.இந்நிலையில், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி பட்டப்படிப்புகளுக்கு, 2020 - 21ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கு, &'நீட்&' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில், அரசு ஒதுக்கீடு, 3,310 பேர்; நிர்வாக ஒதுக்கீடு, 1,301 பேருக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீடு தரவரிசை பட்டியலில், 119 பேர் இடம் பெற்றுள்ளனர்.இது குறித்து, மாணவர் சேர்க்கை தேர்வு குழு செயலர் டாக்டர் மலர்விழி கூறியதாவது:அரசு கல்லுாரிகளில் உள்ள, 281 இடங்கள்; தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கான, 822 இடங்கள் என, 1,103 இடங்களில், அரசு பள்ளி மாணவர்கள், 82 பேருக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த படிப்புகளுக்கான கவுன்சிலிங் விரைவில் துவங்க உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்