உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் கோரிக்கை ஏற்பு; 9 நாள் விட்டாச்சு லீவு

சென்னை: காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களை, அக்டோபர் 6 வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது; 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், வரும் 27ம் தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடக்கின்றன. அதைத் தொடர்ந்து, அக்., 2 வரை ஐந்து நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.கடந்தாண்டுகளில் 10 நாட்கள் விடுமுறை விடப்பட்ட நிலையில், 3, 4ம் தேதிகளில் அதாவது வியாழன், வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை விட்டால், அடுத்து வரும் சனி, ஞாயிறுகளையும் சேர்த்து, ஒன்பது நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், மிகக் குறைந்த விடுமுறையில் விடைத்தாள்களை திருத்துவது சிரமம் எனவும் அவர்கள் கூறினர்.இதையடுத்து, பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ், அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.இதன்பின், பள்ளி கல்வித் துறை இயக்குனர் நேற்று முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், துறையின் கீழ் செயல்படும் அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும், காலாண்டு தேர்வு முடிந்து, அக்., 7ல் திறக்கப்படும் என, அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்