பள்ளியில் திறனாய்வு தேர்வு 9 மாணவர்கள் ஆப்சென்ட்
வால்பாறை: வால்பாறையில் நடந்த தமிழ்மொழி இலக்கிய திறனாய்வுத்தேர்வில்,9 மாணவர்கள் தேர்வு எழுதவரவில்லை.வால்பாறை தாலுகாவில் உள்ள அரசு பள்ளிகளில், 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதம் தோறும், 1,000 ரூபாய் அரசின் சார்பில் ஊக்கத்தொகை வழங்கும் வகையில் மாணவர்கள் மத்தியில் தமிழ்மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வு மையத்தில், தேர்வுக்கு மொத்தம், 122 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 9 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. தேர்வுக்கான ஏற்பாடுகளை, அட்டகட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாபு மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.