உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் பணிக்கு தேர்வு 91 பேர் பங்கேற்பு

கோவை: கோவை மத்திய சிறையில் நேற்று நடந்த ஆசிரிய பணியிட தேர்வில், 91 பேர் பங்கேற்றனர். கோவை மத்திய சிறையில் நான்கு இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலி பணியிடத்தை பூர்த்தி செய்யும் வகையில், ஆசிரியர் பட்டயப்படிப்புடன் இரண்டு ஆண்டு முன் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. நேற்று காலை, 11.௦௦ மணிக்கு, காலி பணியிடத்துக்கு விண்ணப்பித்த, 91 பேர் பங்கேற்றனர். சிறை கண்காணிப்பாளர் பழனி முன்னிலையில், சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு நான்கு பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவை மத்திய சிறை அதிகாரிகள் கூறுகையில், நான்கு பணியிடங்களுக்கு, ௯௧ பேர் பங்கேற்றுள்ளனர். எழுத்து தேர்வு, பொதுப்போட்டி என, பல கட்டங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டு, இறுதியில் நான்கு இடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்