மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு
அரியானா மாநிலம் ரோக்டாக்கில் ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு முதலாம் ஆண்டிலேயே மொத்தம் 50 மாணவர்கள் மேலாண்மை படிப்பில் சேர்க்கப்பட்டனர். இந்தாண்டு இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க ஐ.ஐ.எம்., ரோக்டாக் முடிவுசெய்துள்ளது. இதன்படி 130 மாணவர்களை நடப்பு கல்வியாண்டில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக அதன் இயக்குனர் டாக்டர். ரமேஷன் தெரிவித்துள்ளார். திருச்சி, ராஞ்சி, ராய்ப்பூர், ரோக்டாக் ஆகிய நகரங்களில் புதிதாக துவங்கப்பட்ட நான்கு ஐ.ஐ.எம்., களுக்கான சேர்க்கையை ஐ.ஐ.எம்., ரோக்டாக்கே நிர்வகிக்கிறது.