தகுதி மதிப்பெண் குறைப்பு
மகாராஷ்டிராவில் இன்ஜினியரிங் படிப்புகளில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண்ணை ஏ.ஐ.சி.டி.இ., குறைத்துள்ளது. இதனால் மாநிலத்தில் கூடுதலாக 13 ஆயிரம் மாணவர்களுக்கு இன்ஜினியரிங் படிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை பொது பிரிவு மாணவர்களுக்கான இன்ஜினியரிங் தகுதி மதிப்பெண் 50 சதவீதமாக இருந்தது. இதை இந்த கல்வி ஆண்டு முதல், 50 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக குறைத்துள்ளது. அதேபோல இட ஒதுக்கீடு பிரிவினருக்கான தகுதி மதிப்பெண் 45 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைத்துள்ளது. இதனால் மாநிலத்தில் ஆண்டுதோறும் வழக்கமாக இன்ஜினியரிங் சேரும் மாணவர்களை விட, இந்தாண்டு கூடுதலாக 13 ஆயிரம் மாணவர்கள் இன்ஜினியரிங் படிக்கும் வாய்ப்பை பெற்றள்ளனர்.