உள்ளூர் செய்திகள்

மாற்றியமைக்கப்பட்ட ஜி.ஆர்.இ., தேர்வு

மாற்றியமைக்கப்பட்ட கிராஜூவேட் ரெக்கார்டு தேர்வு (ஜி.ஆர்.இ.,) இந்த ஆண்டு நடைமுறைக்கு வரவுள்ளது. ஜி.ஆர்.இ., தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. மாற்றியமைக்கப்பட்ட முறையில் தேர்வுகள், இந்த ஆண்டு நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில ஜி.ஆர்.இ., தேர்வு உதவுகிறது. இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய நடைமுறை ஆறு பிரிவுகளை கொண்டது. புதிய நடைமுறையில் காரணமறிதல் மற்றும் திறனாய்வு பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் ஜி.ஆர்.இ., தேர்வை உலகம் முழுவதும் ஆறு லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்வதாக 2006ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் 2007ல் அது நீக்கம் செய்யப்பட்டது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம் இந்த ஆண்டு முதல் அமலாகிறது. மேலும் விபரங்களுக்கு http://www.ets.org/gre என்ற தளத்தைப் பார்க்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்