உள்ளூர் செய்திகள்

சிறந்த ஐ.டி., நிறுவனங்கள்

மென்பொருள் ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்கு வகுக்கிறது. வெளிநாட்டு ஐ.டி., நிறுவனங்கள், உள்நாட்டு ஐ.டி., நிறுவனங்கள் என இந்தியாவில் ஐ.டி., நிறுவனங்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. இந்நிலையில் ஐ.டி., நிறுவனங்களில் சிறந்தது எது என்ற கருத்து கணிப்பை Dataquest Cyber Media Research நிறுவனம் நடத்தியுள்ளது. இந்த கருத்துகணிப்புக்கு இந்திய அளவில் மொத்தம் 200 ஐ.டி., நிறுவனங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 3,337 ஊழியர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒட்டுமொத்தமாக எச்.சி.எல்., நிறுவனம் முதலிடத்தை பெற்றுள்ளது. இதை தவிர்த்து ஊழியர்களின் கனவு நிறுவனங்கள் பட்டியலில் "இன்போசிஸ்' முதலிடத்தை பெற்றுள்ளது. ஊழியர்களை திருப்திபடுத்தும் நிறுவனங்கள் பட்டியலில் "கேப்ஜெமினி இந்தியா' முதலிடத்தை பெற்றுள்ளது. "டாப் 10" ஐ.டி., நிறுவனங்கள்1. எச்.சி.எல்., 2. ரோல்டா இந்தியா3. ஐகேட் பட்னி4. சேப் லேப்ஸ் இந்தியா5. டவன்ட் டெக்னாலஜி6. மகிந்த்ரா சத்யம்7. துலிப் டெலிகாம்8. கேப்ஜெமினி இந்தியா9. விர்ச்சுசா இந்தியா10. நகாரோ சாப்ட்வேர் "டாப் 10" கனவு ஐ.டி., நிறுவனங்கள்1. இன்போசிஸ்2. டி.சி.எஸ்.,3. ஐ.பி.எம்., இந்தியா4. மைக்ரோசாப்ட் இந்தியா5. எச்.சி.எல்., இன்போசிஸ்டம்6. ரோல்டா இந்தியா7. சேப் இந்தியா8. ஐகேட் பட்னி9. அசெஞ்சர்10. ஆரக்கல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்