உள்ளூர் செய்திகள்

ஆரக்கிள் நிறுவனத்தில் வேலை

முன்னணி தகவல் தொழில்நுட்பத் துறையான ஆரக்கிள் நிறுவனம், ஓராண்டு காலத்திற்குள் 3,500 பேருக்கு வேலை வாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளது. வரும் 2012ம் ஆண்டு மே மாதத்திற்குள் 3,500 பட்டதாரிகளுக்கு இந்நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. தற்போது இந்நிறுவனத்தில் 21,000 பேர் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பெங்களூர், ஹைதராபாத் என இரண்டு இடங்களில் ஆரக்கிள் நிறுவனம் அமைந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்தின் அனைத்து பிரிவுகளிலும் இது உள்நாட்டு, வெளிநாட்டு நுகர்வோர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது. டிவிட்டர், பிளாக் என இணையதளங்களின் எல்லா அங்கங்கள் மூலமாகவும் தங்கள் நிறுவனத்திற்குத் தேவையான திறமையான ஊழியர்களைத் தேர்வு செய்யும் நடவடிக்கையில் ஆரக்கிள் ஈடுபட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்