மதுரையில் புத்தக கண்காட்சி
மதுரை: மதுரை டர்னிங் பாயின்ட் புத்தக நிலையம் சார்பில் கே.கே.நகரில் லட்சுமி அரசு கல்யாண மண்டபத்தில் புத்தக கண்காட்சி நடக்கிறது. அனைத்து புத்தகங்களும் 10 சதவீதம் தள்ளுபடி விலையிலும், குழந்தைகளுக்கான புத்தகம் 20 சதவீதம் தள்ளுபடி விலையிலும் விற்கப்படுகிறது. அனைத்து வயதினரும் விரும்பி படிக்கும் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. எந்த புத்தகம் எடுத்தாலும் விலை ரூ.2 முதல் ரூ.50 வரை. மொத்தமாக புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு சிறப்பு சலுகை உண்டு. கண்காட்சி நவ., 23 வரை தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. தொடர்புக்கு: 99404 89318.