ஜே.ஆர்.சி., ஆசிரியர்களுக்கு பயிற்சி
செஞ்சி: செஞ்சி வட்டார வள மையத்தில் செஞ்சி, மேல்மலையனூர் வட்டாரத்தை சேர்ந்த ஜே.ஆர்.சி., ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. மேல்மலையனூர் ஏ.இ.ஓ., ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கன்வீனர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். செஞ்சி ஏ.இ.ஓ., ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். இளங்கோவன் கொடியேற்றினார். மாநில பயிற்றுநர்கள் தண்டபாணி, முகமது சித்திக் ஆகியோர் பயிற்சியளித்தனர். சேவை, நட்பு, என் கடன் பணி செய்து கிடப்பது குறித்தும், ரெட்கிராஸ் வரலாறு குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.