பள்ளி விளையாட்டு விழா
காரைக்குடி: காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. நீல நிறக்குழுவினர் முதல் பரிசை பெற்றனர். தனி நபர் சிறப்பு பரிசை ஜெயராம் பாஸ்டின், அஸ்வினி, சமீர், சாருமதி பெற்றனர். 100 மீட்டர், 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் ஜெரோம் பாண்டியன், அஸ்வின் அசோகன் முதல் பரிசை பெற்றனர். நீளம் தாண்டுதலில் ஆரோ ஸ்வீபர்ட், குண்டு எறிதலில் கஜலட்சுமி, 200 மீட்டர் ஓட்டத்தில் அகஸ்டின் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு தாளாளர் சத்யன் பரிசு வழங்கினார்.