உள்ளூர் செய்திகள்

மாநில கராத்தே போட்டி

புதுச்சேரி: புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு இடையிலான மாநில அளவிலான கராத்தே போட்டி ராஜிவ்காந்தி உள் விளையாட்டரங்கில் நடந்தது. புதுச்சேரி சென்டோகன் மார்ஷியல் ஆர்ட்ஸ் காலேஜ் சார்பில் 19 வது மாநில அளவிலான கராத்தே போட்டி, தேக்வாண்டோ மற்றும் கிக் பாக்ஸிங் போட்டி ராஜிவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. கராத்தே மதி ஒளி தலைமை தாங்கி நடத்தினார். புதுச்சேரி பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். பரிசளிப்பு விழாவில், முன்னாள் மத்திய அமைச் சர் நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். முன்னாள் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினர். கராத்தே சங்க துணை தலைமை செயலர் கணே சன், தலைவர் வளவன், செயலர் இளங்கோ உள்ளிட்ட நிர்வாகிகள், பள்ளி முதல்வர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.சுந்தரராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்