உள்ளூர் செய்திகள்

தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு

அவிநாசி: தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு மற்றும் மாணவர்களின் படைப்பாற்றல் போட்டி, அவிநாசி மகாராஜா இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்தது; கல்லூரி முதல்வர் குப்புசாமி தலைமை வகித்தார். மாணவர் பிரனேஷ் வரவேற்றார். கோவை பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர் தேவதாசன் துவக்கி வைத்தார். பிருத்வி கல்லூரி முதல்வர் ராம்குமார், இயந்திரவியல் துறை தலைவர் இளங்கோவன், இயந்திர மின்னணுவியல் துறை தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர், கருத்தரங்கு நோக்கம், செயல்பாடு குறித்து பேசினர். பல்வேறு இன்ஜினியரிங் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்று, தங்களது படைப்பு சம்பந்தமான அறிக்கைகளை சமர்ப்பித்து, பேசினர். சிறந்த படைப்புகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. பேராசிரியர்கள் ரமேஷ்குமார், கவுதம், ரமேஷ், கோபிநாத் ஆகியோர், கருத்தரங்கை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்