சமஸ்கிருதம் மாணவர்களுக்கு உதவித்தொகை
சென்னை: சமஸ்கிருத மாணவர்களுக்கு, கல்வி உதவி தொகை வழங்குவதற்கான பட்டியல் தயாரிக்குமாறு, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இணை இயக்குனர் நரேஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களில், சமஸ்கிருதம் படிப்பவர்களுக்கு, மத்திய அரசால் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. தகுதியான, 200 மாணவ - மாணவியர், உதவித் தொகை பெறுவர். இதன்படி, 2020 - 21ம் கல்வி ஆண்டில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, உதவித் தொகை வழங்க, பள்ளி தலைமை ஆசிரியர்கள், தகுதி பட்டியல் தயாரிக்க வேண்டும். மேலும், 8ம் வகுப்பு முதல், பிளஸ் 1 வரையில் மாணவ - மாணவியர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், தகுதி பட்டியலை தயாரிக்க வேண்டும்.இறுதிப் பட்டியலை, மாவட்ட வாரியாக வரும், 30ம் தேதிக்குள், பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.