உள்ளூர் செய்திகள்

தேர்தல் கல்வியறிவு விழிப்புணர்வு

புதுச்சேரி; அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியின் .தேர்தல் கல்வியறிவு குழுமத்தின் செயல்பாடுகளை பாராட்டி விருது வழங்கப்பட்டது.புதுச்சேரி அமலோற்பவம் பள்ளியில் 2018ம் ஆண்டு முதல், தேர்தல் கல்வியறிவு குழுமம் செயல்பட்டு வருகின்றது. கடந்த இரு ஆண்டுகளாக தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, மாநில தேர்தல் துறையின் பாராட்டுகளை பெற்றது. வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக வாக்காளர்கள் சரிபார்ப்பு திட்டம், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தும் முறை, வீடு வீடாக வாக்காளர் சரிபார்ப்பு திட்டம், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.இப்பணிகளை பாராட்டி, புதுச்சேரி தேர்தல் துறையின் 2019-20 ம் ஆண்டின் சிறந்த குழுமத்திற்கான விருதினை அமலோற்பவம் பள்ளிக்கு வழங்கியுள்ளது. இப்பள்ளி, இவ்விருதினை இரண்டாவது முறையாக பெற்றுள்ளது. தேர்தல் கல்வி குழுமத்தின் பொறுப்பு அதிகாரி விக்டர் இன்பராஜின் செயல்பாடுகளை பாராட்டி, சிறந்த அதிகாரிக்கான விருது வழங்கப் பட்டது.கம்பன் கலையரங்கில் நடந்த தேசிய வாக்காளர் தின விழாவில் இவ்விருதுகளை, தலைமை செயலர் அஸ்வனிகுமார், மாநில தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங், மாவட்டத் தேர்தல் அலுவலர் பூர்வா கார்க் வழங்க, அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியின் துணை முதல்வர் செல்வநாதன், வேதியியல் விரிவுரையாளர் அருள் ரொசாரியோ ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பள்ளி நிறுவனர் லுார்துசாமி, மன்றத்தின் செயல்பாடுகளைப் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்