விண்வெளி ஆய்வுக்கு விர்ர்ர்ர்...!
விண்வெளி ஆராய்ச்சி துறைக்கு, வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், 2019 - 2020 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 4,449 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் துறைக்கு, மொத்தம், 13 ஆயிரத்து, 949 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. &'ககன்யான்&' எனப்படும், விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தின் கீழ், நான்கு விண்வெளி வீரர்கள், ரஷ்யாவில் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்தாண்டு டிச., முதல் பயணம் துவங்க உள்ளதாக, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.