உள்ளூர் செய்திகள்

மாணவர்கள், முதல்வர்களிடம் கலந்துரையாடல்

புதுச்சேரி - கல்வி துறை செயலர், மூன்று நாட்கள் இணைய வழியாக மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லுாரி முதல்வர்களிடம் கலந்துரையாடி கருத்துகளை கேட்டறிய உள்ளார்.புதுச்சேரி உயர்கல்வி துறை செயலராக இருந்த அன்பரசு லட்சத்தீவிற்கு மாற்றப்பட்டார்.அவருக்கு பதிலாக கல்வி துறை செயலராக அசோக்குமார் நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 20ம் தேதி பொறுப்பேற்றார்.முதற்கட்டமாக உயர்கல்வி துறையின் மேம்படுத்த விஷயம் குறித்து உயரதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். தற்போது மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லுாரி முதல்வர்களிடம் இன்று 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை கூகுள் மீட் வழியாக கலந்துரையாடி கருத்துகளை கேட்டறிய உள்ளார். இது குறித்து உயர்கல்வி துறை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு சுற்றிக்கை அனுப்பியுள்ளது.மேலும் உயர் கல்வித் துறை குறித்த திட்டங்கள், கல்லுாரிகளில் உள்ள பாடப்பிரிவு சம்பந்தமாக தகவல்களை பொது மக்கள் தெரிந்து கொள்ள, தொலைபேசி எண் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக பி.எஸ். என்.எல்., நிறுவனத்துடன் இணைந்து உயர் கல்வித் துறை பணிகளை துவக்கியுள்ளது. உயர் கல்வி துறையை எந்த வகையில் மேம்படுத்த முடியும் என்பதை தெரிவிக்க விரும்புவோர் feedback@dhtepdy.edu.in என்ற இ-மெயில் அல்லது நேரடியாக உயர்கல்வி துறையினரிடம் தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்