உள்ளூர் செய்திகள்

மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி

புதுச்சேரி: மருத்துவ மாணவர்கள் கூடுதலாக 2 மாதம் இன்டர்ன்ஷிப் பெறும் முடிவை கைவிட வேண்டும் என சென்டாக் மாணவர்கள், பெற்றோர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.புதுச்சேரி சென்டாக் மாணவர்கள், பெற்றோர்கள் நலச்சங்க தலைவர் நாராயணசாமி, பொருளாளர் நாகராஜன் ஆகியோர் கவர்னர், முதல்வருக்கு அனுப்பிய மனு:புதுச்சேரி மருத்துவ கல்லுாரிகளில் மாணவர்கள் 2 மாதங்கள் கூடுதலாக இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா காலத்திலும் மாணவர்கள் விடுமுறை எடுக்காமல் மருத்துவ கல்லுாரிகளில் ஓராண்டு முழுமையாக பயிற்சி முடித்துள்ளனர். இவர்கள் கூடுதலாக இரண்டு மாதங்கள் பயிற்சி பெற வேண்டும் என்ற அறிவித்துள்ளதால், மாணவர்கள் வரும் கல்வியாண்டில் எம்.டி.,எம்.எஸ்., மருத்துவ படிப்புக்கான தேர்விற்கு படிக்க முடியாமல் பாதிக்கப்படுவர். மேல்படிப்பு படிக்க முடியாமல் ஒரு ஆண்டுகள் வீட்டில் காத்திருக்கும் நிலை உள்ளது. புதுச்சேரி அரசும், பல்கலைக் கழகமும் உடனடியாக தலையிட்டு முழுமையாக இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்