உள்ளூர் செய்திகள்

தரமற்ற ஆசிரியர் பயிற்சி

நாட்டில் உள்ள 17,503 ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில், 90 சதவீதத்திற்கும் அதிகமானவை தனியாருக்கு சொந்தமானவை. இவற்றின் தரம் குறித்து  அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது.  நாட்டில் உள்ள 17,503 ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில், 90 சதவீதத்திற்கும் அதிகமானவை தனியாருக்கு சொந்தமானவை. இவற்றின் தரம் குறித்து  அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 29 தனியார் பயிற்சி நிறுவனங்களில் 26ல் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்றும் இந்த சிக்கலை மறைக்க வேண்டுமென்றே ஊழல் நடைமுறைகளை பின்பற்றுவதாகவும், ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் பயிற்சி மையங்கள் போதிய பாடத்திட்டத்தை பின்பற்றப்படாததோடு, வருகை பற்றாக்குறை உள்ள அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுத அனுமதித்துள்ளதும், கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலான பயிற்சி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை; 50 சதவீதத்திற்கும் அதிகமான மையங்களில் பாடத்திட்ட ஆய்வகங்கள் இல்லை; 30 சதவீதத்திற்கும் அதிகமான மையங்களில் நூலகங்கள், கணினி ஆய்வகங்கள் அல்லது கருத்தரங்கு அரங்குகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்