நல்லாசிரியர் விருதுக்கு அழைப்பு
ஆசிரியர் பணியில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு தேசிய நல்லாசிரியர் விருது வழங்குகிறது. இந்தாண்டு விருதுக்கு விண்ணப்பிக்க மத்திய கல்வி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.விருப்பமுள்ளோர் ஜூன் 20 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை http://nationalawardstoteachers.education.gov.in ல் காணலாம். கொரோனா காரணமாக கடந்தாண்டு போல் இந்தாண்டும் காணொலி மூலம் விருது வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.