ஆந்திராவுடன் கைக்கோர்க்கிறது இ.டி.எஸ்
ஆந்திரா: ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் புலமை பயிற்சி தர இ.டி.எஸ் (எஜுகேஷன் டெஸ்டிங் சர்வீஸ்) உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆங்கிலப் புலமையில் பின்தங்கியுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இ.டி.எஸ் நிறுவனம் பயிற்சி தர உள்ளது.பேச்சுப் புலமை, மொழி ஆளுமை, பாடங்களை புரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை வழங்குகிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் தகுதியினை வளர்த்துக் கொள்ள முடியும். இந்த 5 வருட கால காலகட்டத்தில், 3 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் ஆங்கிலப் பேச்சுத்திறன், எழுதும் திறன் மற்றும் புரிந்து கொள்ளும் திறன் ஆகியவற்றை கணக்கில் கொண்டு டோஃபல் மூலமாக தேர்வு நடத்தப்படும்.இது குறித்து முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது:எங்களின் இந்த முயற்சியானது மாணவர்களின் ஆங்கில மொழித்திறன் மேம்பாட்டுக்கானதாகும். சிறிய வகுப்பிலிருந்தே இதற்கான முறையான பயிற்சி கொடுக்கும் பொழுது மாணவர்களின் மொழித்திறனும், தன்னம்பிக்கையும் வளரும். அது அவர்களை உள்ளூரில் மட்டிமல்லாமல் உலகளாவிய வாய்ப்பினையும் பெற்று உயர்த்தும். வளமான எதிர்காலத்தை உருவாக்கும்.இ.டி.எஸ்., இந்தியாவின் மேலாளர் சச்சின் ஜெயின் கூறுகையில், ஆந்திர மாநில அரசுடன் இணைந்து மேற்கொண்டுள்ள இம்முயற்சியானது மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டதாகும். ஆங்கில மொழித்திறன் பயிற்சி என்பது அவர்களுக்குக்கான வெற்றி, தகுதியை மட்டுமல்லாது உலகளாவிய வாய்ப்புகளையும் பெற்றுத் தரும். இப்பயிற்சியின் பலன்கள் வருங்காலத்தில் பார்க்கலாம், என்றார்.180 நாடுகளில் செயல்படும் இந்நிறுவனம், இந்தியாவில் முதன் முறையாக ஆந்திர பிரதேச அரசுடன் இணைந்து ஆங்கில மொழித்திறன் மேம்பாட்டுப் பயிற்சியை மேற்கொள்கிறது. மேலும் விபரங்களுக்கு www.ets.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்.