உள்ளூர் செய்திகள்

இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறைகள்

படிப்புகள் மற்றும் கால அளவு:பி.இ., மற்றும் பி.டெக்., படிப்பு - 8 செமஸ்டர்கள் வீதம் மொத்தம் நான்கு ஆண்டுகள்பி.இ., (சாண்ட்விச்), படிப்பு - 10 செமஸ்டர்கள் வீதம் மொத்தம் ஐந்து ஆண்டுகள்கல்வி நிறுவனங்கள்:தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு இட ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளால் ஒப்படைக்கப்பட்ட இடங்கள் ஆகியவை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை - டி.என்.இ.ஏ., கலந்தாய்வு மூலம் ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்படுகின்றன.இவைதவிர, மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனம் - காரைக்குடி, மத்திய பிளாஸ்டிக் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனம் - சென்னை மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹேண்ட்லூம் டெக்னாலஜி - சேலம் ஆகிய மத்திய அரசு கல்வி நிறுவனங்களால் ஒப்படைக்கப்பட்டுள்ள இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.ஆன்லைன் கலந்தாய்வு நடைமுறைகள்:அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக டி.என்.இ.ஏ., 2023க்கான கலந்தாய்வு நடத்தப்படுகிறது. * ரேங்க் லிஸ்ட் - அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகுதியான மாணவர்களின் பட்டியல் - ரேங்க் லிஸ்ட் வெளியிடப்படும். பட்டியலிடப்படும் மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க தகுதி உண்டு.* கட்டணம் செலுத்துதல் - தகுதியான அனைத்து மாணவர்களும், ஆலோசனைக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். * சாய்ஸ் பில்லிங் - டி.என்.இ.ஏ.,  இணையதளத்தில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் மற்றும் படிப்புகளை பட்டியலிட வேண்டும். இதில், எத்தனை சாய்களை வேண்டுமானாலும் மாணவரது விருப்பப்படி பட்டியலிடலாம்.* தேர்வுகளை உறுதிபடுத்துதல் - சுற்று தொடங்கிய மூன்றாவது நாளில் மாணவர்கள் பட்டியலிட்ட தேர்வுகளை இறுதியாக உறுதிப்படுத்த வேண்டும். உறுதிப்படுத்திய பிறகு, எந்த மாற்றமும் செய்ய அனுமதிக்கப்படாது. விண்ணப்பதாரர்கள் உறுதிப்படுத்திய தேர்வுகளின் பட்டியலைக் கொண்ட பி.டி.எப்., ஆவணம், மாணவர்களின் இ-மெயில் முகவரிக்கு அனுப்பப்படும். * தற்காலிக ஒதுக்கீடு - விண்ணப்பதாரர்கள் நிரப்பிய தேர்வுகளின்படி கணினி தற்காலிக இடங்களை அவர்களுக்கு ஒதுக்குகிறது. * ஒதுக்கீடு சலுகையை சமர்ப்பித்தல் - இடங்கள் ஒதுக்கப்பட்ட பிறகு, மாணவர்கள் உறுதிப்படுத்தவோ அல்லது நிராகரிக்கவோ முடியும்.பொதுவாக, மாணவருக்கு பின்வரும் விருப்பங்கள் உள்ளன:* ஒதுக்கப்பட்ட இடத்தை ஏற்றுக்கொள்ளுதல்* மேல்நோக்கி (அப்வர்டு) இயக்கத்துடன் இடத்தை உறுதிப்படுத்துதல்* ஒதுக்கப்பட்ட இடத்தை நிராகரித்து, மேல்நோக்கி நகர்தல்* ஒதுக்கப்பட்ட இடத்தை நிராகரித்து, அடுத்த சுற்றுக்கு செல்லுதல்* கலந்தாய்வில் இருந்து வெளியேறுதல்* மேல்நோக்கி நகர்தல் மற்றும் மாணவரால் முன்பு பட்டியிடப்பட்ட இடங்களில் ஒன்றை பெறுதல், கிடைக்காதபட்சத்தில் அடுத்த சுற்றுக்கு செல்லுதல்குறிப்பிட்ட நேரத்திற்குள் மாணவர் எந்த ஒதுக்கீட்டு விருப்பத்தையும் சமர்ப்பிக்கத் தவறினால், அவருடைய இருக்கை ரத்து செய்யப்படும். இருப்பினும், விண்ணப்பதாரர்கள் அடுத்த சுற்று கலந்தாய்வில் பங்கேற்கலாம்.* இறுதி ஒதுக்கீடு - மாணவர் உள்ளிட்ட விருப்பங்களின்படி, இறுதியாக இடங்கள் ஒதுக்கப்படும். * மாணவர் சேர்க்கை - இறுதி ஒதுக்கீட்டில் இடங்களை பெற்ற மாணவர்கள் சேர்க்கைக் கட்டணம் செலுத்தி, ஒதுக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் விபரங்களை தெரிவிக்க வேண்டும்.குறிப்பு: கலந்தாய்வில், எந்த இடமும் ஒதுக்கப்படவில்லை என்றால், டெபாசிட் தொகையை திரும்ப பெறலாம். முன்னெச்சரிக்கை அவசியம்!மாணவர்கள் எந்த காரணம் கொண்டும், வெளி நபர்கள் யாரிடமும் தங்களது டி.என்.இ.ஏ., கலந்தாய்விற்கான யுசர் ஐ.டி., பாஸ்வேர்டு மற்றும் மொபைல் ஓ.டி.பி., ஆகியவற்றை பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். குறிப்பாக, சாய்ஸ் பில்லிங் எனப்படும் கல்லூரி, பாடப்பிரிவை பட்டியலிடுதல் மற்றும் ஒதுக்கீட்டு விருப்பங்களை தேர்வு செய்தல் ஆகியவற்றை மாணவரே மேற்கொள்ள வேண்டும்.விபரங்களுக்கு: இணையதளம்: www.tneaonline.orgதொலைபேசி: 1800 425 0110,  044-22351014, 22351015இ-மெயில்: tneacare@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்