உள்ளூர் செய்திகள்

வேளாண் பட்டதாரிகளுக்கு அழைப்பு

பொள்ளாச்சி: வேளாண் தொழில் முனைவோர் திட்டத்தில் இணைந்து பணிபுரிய, வேளாண் பட்டதாரிகளுக்கு, கோவை கலெக்டர் கிராந்திகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.வேளாண்மையில் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களை கொண்டு, வளர்ந்து வரும் தொழில்நுட்ப அறிவை வேளாண்மையில் ஈடுபடுத்தி, வேளாண்மையை வளர்ச்சி அடையச் செய்யும் நோக்கத்தில், இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்கும் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது.வேளாண்மை, தோட்டக்கலை மற்றம் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த பட்டதாரி இளைஞர்கள், உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தில் அளிக்கப்படும் நிதி உதவி பெற்று, வங்கி கடனுடன் வேளாண் சார்ந்த தொழிலை புதிதாக துவங்க, முன்வரும் வேளாண் பட்டதாரிகளுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படும்.பயனாளிகள், 21 முதல் 40 வயதுடைய வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பிரிவில் குறைந்தபட்சம் இளநிலையில் பட்டப்படிப்பு முடித்தவராகவும், அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவராகவும் இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் திறன் பெற்ற மற்றும் குடும்பத்துக்கு ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே நிதியுதவி பெற தகுதி உடையவர்.பத்தாம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 சான்றிதழ், பட்டப்படிப்புக்கான சான்றிதழ், ஆதார், ரேஷன் கார்டு, துவங்க உத்தேசித்துள்ள வேளாண் சார்ந்த விரிவான திட்ட அறிக்கை, வங்கி கணக்கு புத்தகம், வங்கியிடம் பெற்ற கடன் ஒப்புதல் ஆவணம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.இத்திட்டத்தில் பதிவு செய்ய விரும்பும் வேளாண் பட்டதாரிகள், அக்ரீஸ் நெட் என்ற இணைய வலைதளத்தில் பதிய வேண்டும். விரிவான திட்ட அறிக்கையை, வட்டார வேளாண் உதவி இயக்குனரிடம் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு, வேளாண் இணை இயக்குனர் மற்றும் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்