உள்ளூர் செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் மக்கர்

சென்னை:தமிழக அரசு துறைகளில் குரூப் 4 பதவிகளில், காலியாக உள்ள, 10,292 இடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., வழியே, கடந்த ஆண்டு ஜூலை, 24ல் போட்டித் தேர்வு நடந்தது. இந்த தேர்வின் முடிவு, இந்த ஆண்டு மார்ச்சில் வெளியானது.கடந்த 20ல், பணி நியமன கவுன்சிலிங் துவங்கி நடக்கிறது. ஒவ்வொரு நாளும் கவுன்சிலிங் முடிந்ததும், நிரம்பிய இடங்களின் எண்ணிக்கை, துறை மற்றும் பிரிவு வாரியாக காலி இடங்களின் எண்ணிக்கை விபரங்கள், டி.என்.பி.எஸ்.சி.யின், www.tnpsc.gov.in இணையதளத்தில், வெளியிடப்படுகின்றன. தேர்வர்கள், மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால் மட்டுமே, சில நேரம் பட்டியல் கிடைக்கிறது. இதுகுறித்து, தேர்வர்கள் கூறுகையில், டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதள சர்வரில், பிரச்னை உள்ளது. காலியிட பட்டியலை எளிதில் பார்க்குமாறு, தொழில்நுட்ப வசதியை மேம்படுத்த வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்