உள்ளூர் செய்திகள்

பாடசாலையின் இடம் ஒப்படைக்கப்படுமா?

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில், அறநிலையத்துறை கையகப்படுத்திய விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா வேதபாடசாலை இடத்தை, மதுரை உயர் நீதிமன்ற இறுதி உத்தரவின் படி மீண்டும் ஒப்படைக்க வேண்டும். இதற்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனி கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துஉள்ளது.பாகப்பிரிவினைதிருவாங்கூர் சமஸ்தானத்தில், திருமால் மகாராஜா காலத்தில் தேவி பகவதி அம்மன் கோவில் அருகில் கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் தாலுகா பழைய சர்வே எண்கள் 1/1, 1/31 மற்றும் 1/122ல் சொத்துக்கள் அமைந்திருந்தன. அந்த சொத்துக்களை தனது மகள் ஸ்ரீமதி பகவதி பிள்ளை கொச்சம்மாளுக்கு தானமாக, 1914ல் வழங்கினார். அவர், 1927ல் தன் வாரிசுகளான பத்மநாபன், கார்த்தியாயினி பகவதி பிள்ளைக்கு எழுதிக் கொடுத்தார்.கார்த்தியாயினி, 1937ம் ஆண்டும், பத்மநாபன், 1948ம் ஆண்டும் இறந்தனர். பத்மநாபன் தம்பியின் வாரிசுகளான லீலா, ஜெயந்தி, கார்த்தியாயினி வாரிசுகளான ராமர், வேலாயுதம் ஆகியோர் குடும்ப சொத்துக்களுக்கு பாகப்பிரிவினை பத்திரம் ஏற்படுத்தினர்.விற்பனைஅதற்கான பத்திரத்தை, 1948ல் திருவனந்தபுரம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தனர். வேலாயுதம் தனக்கு சொந்தமான அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் அமைந்த சொத்துக்களின் ஒரு பகுதியான, 37 சென்ட் நிலத்தை வெங்கடாசலம் அய்யர் என்பவருக்கு, 1972ல் விற்பனை செய்தார். வெங்கடாசலம் அய்யர், 1981ல் மகரிஷி சர்வதேச வேத அறிவியல் மற்றும் கற்றல் நிறுவனம் என்ற கல்வி நிறுவனத்திற்கு அந்த இடத்தை விற்பனை செய்தார்.அந்த கல்வி நிறுவனம் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா கல்வி நிறுவனத்துடன், 1983ம் ஆண்டு விற்பனை ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது. அதன்படி அந்த இடம் சுவாதீனம் பெற்று, வேத பாடசாலை நடத்தி வரப்பட்டது. பாடசாலைக்கு மத்திய, மாநில அரசுகளால் நிதி மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டுஉள்ளன.விற்பனை ஒப்பந்தத்தின் படி, கல்வி நிறுவனம் கிரையம் செய்யாமல், காலம் தாழ்த்தியது. விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா கல்வி நிறுவனம் நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கில் சமரசத் தீர்வு ஏற்பட்டு, 2007ல் மாவட்ட நீதிபதி, விஸ்வ ஹிந்து வித்யா கேந்திரா என்ற நிறுவனத்திற்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தார். ஆனால், 2002லேயே, பகவதி அம்மன் கோவில் சார்பில், நிலத்தை ஒப்படைப்பு செய்யுமாறு விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா நிறுவனத்திற்கு அறிவிப்பு ஒன்று அனுப்பப்பட்டு இருந்தது.அந்த அறிவிப்பை எதிர்த்து, விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா நிறுவனம், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன் தீர்ப்பில் அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்ட வாதங்களும், ஆவணங்களும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன.அறநிலையத்துறை சீல்அந்த தீர்ப்பை தனக்கான பின்னடைவாக கருதிய கோவில் நிர்வாகம், அறநிலையத்துறை சட்டப்பிரிவு, 78ன் படி அறிவிப்பை அனுப்பியது. விஷ்வ இந்து வித்யா கேந்திரா நிறுவனத்தை, ஆக்கிரமிப்பாளர் என, இணை கமிஷனர் சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், காவல்துறை பாதுகாப்புடன் கடந்த மாதம், 14ம் தேதி, விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா நிறுவனத்தின் வேத பாடசாலையை, அறநிலையத்துறை பூட்டி சீல் வைத்தது.இடைக்கால உத்தரவுஇது தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், அறநிலையத்துறை வைத்த சீலை உடனடியாக அகற்ற வேண்டும் என, 24ம் தேதி, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவின் மீது அறநிலையத் துறையால், மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தொடர்பாக கடந்த, 14ம் தேதி இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவில் ஹிந்து சமய அறநிலையத்துறை சுவாதீனம் எடுத்த விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா சொத்தை, அதன் வசம் இரண்டு வாரங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும்; நாகர்கோவில் முதன்மை நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள உரிமை மூல வழக்கை, மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் நகல் கிடைத்தபிறகும் இதுவரை அறநிலையத்துறையால் சீல் வைத்து வசப்படுத்தப்பட்ட ஹிந்து வித்யா கேந்திரா சொத்தை, திரும்ப ஒப்படைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அறநிலையங்கள் துறை தலைமைச் செயலர் மணிவாசன் ஆகியோர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்