தூய்மை குறித்து விழிப்புணர்வு
கழிவு மேலாண்மையில் கடுமையான சவால்களை கேரள அரசு எதிர்கொண்டுள்ள நிலையில், அவை குறித்த பாடங்களை அடுத்த கல்வியாண்டு முதல் பாடப்புத்தகங்களில் சேர்க்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன் வாயிலாக, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை இளைஞர்களுக்கு ஏற்படுத்த முடியும் என்று அம்மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.சமீபத்தில் நடந்த விழாவில், மாநில கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி பேசுகையில், &'அறிவியல் ரீதியிலான மற்றும் நிலையான கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை இளம் மனங்களில் ஏற்படுத்துவது அவசியம். அது சமூகத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே, இந்த தலைப்பு பாடப்புத்தகங்களில் சேர்க்கப்படும். கழிவு மேலாண்மை செயல்பாட்டில், பெண்களின் பங்கும் மிக முக்கியமானது’, என்று குறிப்பிட்டுள்ளார்.