உள்ளூர் செய்திகள்

கால்நடை வளர்ப்பு பயிற்சி

கோவை: சரவணம்பட்டியில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ பல்கலை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் இம்மாதத்திற்கான இலவச கால்நடை பயிற்சிக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நாட்டுக்கோழி வளர்ப்பு 12ம் தேதியும், வெள்ளாடு வளர்ப்பு 26ம் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் நேரிலோ அல்லது 0422-2669965 என்ற தொலைபேசியில் தொடர்புகொண்டோ பெயரை பதிவு செய்துகொள்ளலாம். பயிற்சி காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும். விவசாயிகள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, பயிற்சி மைய தலைவர் ஆறுமுகம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்