டி.என்.பி.எஸ்.சி., எழுத்துத் தேர்வு
சென்னை: ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிக்கான எழுத்துத் தேர்வு வரும் 9, 10 தேதிகளில் நடக்கிறது என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிக்கான எழுத்துத் தேர்வு வரும் 9ம் தேதி, 10 தேதிகளில் நடக்கிறது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஓ.டி.பி., மூலம் மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.