கல்லுாரிகளில் பேச்சு போட்டி
கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, கல்லுாரி அளவில், பல்கலை அளவில், மாநில அளவில் பேச்சுப் போட்டி நடக்கும். அதற்கு பரிசுத் தொகை அளிக்கப்படும். பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையே, பேச்சுப் போட்டி நடத்த, அண்ணா பல்கலைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி வரலாற்றை மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காக, விழுப்புரத்தில் ஜன., 2 முதல் 6ம் தேதி வரை கண்காட்சி நடக்கும். மாநில அளவிலான பேச்சு போட்டியும் அங்கு நடக்கும். இதற்கு, 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில கல்விக் கொள்கை அறிக்கை, விரைவில் முதல்வரிடம் வழங்கப்படும். - பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சர்