உள்ளூர் செய்திகள்

மாணவியருக்கு இலவச நாப்கின்

பெங்களூரு: துாய்மை திட்டத்தின் கீழ் 10 முதல் 18 வயது வரையிலான மாணவியருக்கு இலவச சானிடரி நாப்கின் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.இது தொடர்பாக மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கூறியதாவது:துாய்மை திட்டத்தின் கீழ் 10 முதல் 18 வயது வரையிலான மாணவியருக்கு, இலவச சானிடரி நாப்கின் வழங்க திட்டமிட்டுள்ளோம். 19.27 லட்சம் மாணவியருக்கு நாப்கின் வழங்க, நடப்பாண்டு 47 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.உடலை துாய்மையாக வைத்து, ஆரோக்கியமாக இருந்து, கல்வியில் சாதனை செய்ய இத்திட்டம் உதவியாக இருக்கும். பெண்ணொருவர் கல்வி கற்றால் ஒரு பள்ளி திறந்ததை போன்றதாகும் என்பது, எங்களுக்கு தெரியும். மாநிலத்தின் ஒவ்வொரு பெண்ணும், உயர் கல்வி பெற்று குடும்பம் மற்றும் சமுதாயத்தின் சொத்தாக வேண்டும். இதற்காக நாங்கள் பணியாற்றுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்