உள்ளூர் செய்திகள்

ஜிப்மரில் பட்டமளிப்பு விழா

புதுச்சேரி: ஜிப்மரில் மருத்துவ படிப்புகளுக்கான பட்டமளிப்பு விழா 28, 29 ஆகிய தேதிகளில் நடக்கிறது.ஜிப்மர் மருத்துவ கல்லுாரியில், மருத்துவ படிப்பிற்கான 13வது பட்டமளிப்பு விழா 28ம் தேதி காலை 10 மணிக்கு அப்துல் கலாம் கலையரங்கில் நடக்கிறது. எம்.பி.பி.எஸ்., எம்.டி., எம்.டி.எஸ்., பி.எச்.டி., பி.டி.எப்., பி.டி.சி.சி., டி.எம்., உள்ளிட்ட படிப்புகளை முடித்த 442 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் 186 பேர் பட்டம் பெறுகின்றனர்.கேச்சர் புற்றுநோய் மருத்துவமனை ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ரவிகண்ணன் சிறப்புரையாற்றி, பதக்கங்களை வழங்க உள்ளார். இதேபோல் செலிலியர் மற்றும் துணை மருத்துவ படிப்புகளுக்கான 11வது பட்டமளிப்பு விழா 29ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் எம்.எஸ்.சி., நர்சிங், அலைடு ஹெல்த் சயின்ஸ், எம்.பி.எச்., பி.ஜி.டி., பி,எஸ்.சி., நர்சிங் முடித்த 360 மாணவர்கள் பட்டம் பெற உள்ளனர்.எமெரிடஸ் நிறுவன இயக்குநர் ராஜகோபால், ஜிப்மர் தலைவர் விஷ்ப மோகன் கடோச், இயக்குநர் ராகேஷ் அகர்வால் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். இரண்டு பட்டமளிப்பு விழாவிலும் 802 மாணவர் பட்டம் பெற உள்ளனர்.மேலும் அதிக மதிப்பெண் பெற்ற 110 மாணவர்களுக்கு பதக்கம், பரிசுகள் வழங்கப்பட உள்ளது. ஜிப்மர் கல்வி மையத்தில், மாணவர்களின் பெற்றோர், குடும்பத்தினர் பட்டமளிப்பு விழாவை காண நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆன்லைனிலும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.இத்தகவலை ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்