உள்ளூர் செய்திகள்

தட்டச்சு தேர்வு அட்டவணை

சென்னை: வரும், 2024ம் ஆண்டுக்கான தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு கால அட்டவணையை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.இந்த தேர்வுகள் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகின்றன. சுருக்கெழுத்துக்கான தேர்வு, பிப்., 10 மற்றும் ஆகஸ்ட், 10ல் துவங்கும். கணக்கு பதிவியலுக்கு, பிப்., 19, ஆக., 19; தட்டச்சுக்கு, பிப்., 24, ஆக., 24ல் தேர்வுகள் துவங்கும். தேர்வு முடிவுகள் ஏப்., 23, அக்., 22ம் தேதிகளில் வெளியாகும். கூடுதல் விபரங்களை, dte.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்