உள்ளூர் செய்திகள்

தாய்மொழி வாசிப்பு நிகழ்ச்சி

மதுரை: மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சேவாலயம் மாணவர்கள் விடுதியில் அறிவுசார் தாய்மொழி வாசிப்பு நிகழ்ச்சி அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் தலைமையில் நடந்தது.மணிகண்டன் பேசுகையில், தாய்மொழியோடு பிற மொழிகளை இணைத்து பேசுவது இயல்பாகிவிட்டது. புத்தகங்களை தமிழில் படிப்பதன் மூலம் அதன் கருத்துகள்முழுமையாக மனதில் நிற்கும் என்றார். சமூக ஆர்வலர்கள் ரமேஷ்குமார், அசோக்குமார், விடுதி பொறுப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்