சான்று விதைகள் விற்பனைக்கு
மதுரை: மதுரை விவசாய கல்லுாரியின் மத்திய பண்ணையில் அரசு சான்றளித்த முதல், 2ம் நிலை ஆதாரவிதைகள், உண்மை நிலை மற்றும் சான்றுநிலை நெல்விதைகள் விற்பனைக்கு உள்ளன.கோ 51, ஏ.டி.டி. 39, ஐ.ஆர். 20, சி.ஆர். 1009 சப் 1 ரக ஆதார விதைகள்,ஏ.டி.டி.37 சான்றளிக்கப்பட்ட விதை, டி.கே.எம்.13, ஏ.எஸ்.டி 16 உண்மைநிலை விதைகள் இருப்பில் உள்ளன. 30 கிலோ பைகளாக வழங்கப்படும். தொடர்புக்கு: 94420 54780.