உள்ளூர் செய்திகள்

மத்திய சிறையில் மாணவர்கள்

மதுரை: தமிழ்நாடு விவசாய கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பி.எஸ்சி., (ஊட்டச்சத்து, உணவு முறைகள்) முதலாண்டு மாணவர்கள் 50 பேர் நேற்று மதுரை மத்திய சிறை சந்தையை பார்வையிட்டனர். துறைத் தலைவர் சசிதேவி தலைமையில் வந்த அவர்கள், சந்தையின் செயல்பாடுகள், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை மூலம் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்தனர். மதுரை டி.ஐ.ஜி., பழனி, சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்