சென்னை ஐ.ஐ.டி.,யில் எம்.பி.ஏ.,
சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனம் எம்.பி.ஏ., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.கால அளவு: 2 ஆண்டுகள்தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் குறைந்தது, 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் அல்லது மாற்றுத்திறனாளிகள் 55 மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.விண்ணப்பிக்கும் முறை: https://doms.iitm.ac.in/admission/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: 'கேட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நேர்காணல் நடத்தப்பட்டு, அட்மிஷன் வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம்:பொதுப் பிரிவினர்: ரூ. 1600எஸ்.சி., / எஸ்.டி.,: ரூ. 800விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31விபரங்களுக்கு: https://doms.iitm.ac.in/