உள்ளூர் செய்திகள்

கண்விழித்திரை மருத்துவ மாநாடு

மதுரை: மதுரையில் அகில இந்திய கண்விழித்திரை மருத்துவர்கள் மாநாடு 2 நாட்கள் நடந்தது.மதுரை அரவிந்த் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் நரேஸ் தலைமை வகித்தார். மருத்துவமனையின் தலைவர்கள் நம்பெருமாள்சாமி, நாச்சியார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.சர்க்கரை நோயால் கண்விழித்திரையில் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சை, நவீன தொழில்நுட்ப முறைகள் பற்றி நேரடியாக விளக்கினர். அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் நாடுகளில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்ற நிபுணர்கள் மூலமும் விளக்கப்பட்டது.டில்லி, கொல்கத்தா, ஐதராபாத், சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்தும் சுக்லா, லோவன்ஸ்டீன், ராஜீவ்ராமன், மகேஸ் சண்முகம், மகேஸ் கோபாலகிருஷ்ணன் உட்பட 200க்கும் மேற்பட்ட கண் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்