இன்று கல்விக்கடன் முகாம்
சென்னை: நந்தனம், ஒய்.எம்.சி.ஏ.,வில் இன்று கல்விக்கடன் முகாம் நடக்கிறது.தமிழக அரசு மற்றும் வங்கிகள் இணைந்து, அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்காக கல்விக்கடன் முகாம் நடத்தி வருகின்றன. அந்தவகையில், சென்னை மாவட்டத்தில், நந்தனம், ஒய்.எம்.சி.ஏ.,வில் இன்று மாபெரும் கல்விக்கடன் முகாம் நடக்கிறது.கல்விக்கடன் விண்ணப்பம் அதற்கு தேவையான வருமான சான்று, பான்கார்டு விண்ணப்பம் உள்ளிட்டவை இ - சேவை வாயிலாக, முகாமிலேயே பதிவு செய்யலாம்.இந்த வாய்ப்பை பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.