விடைத்தாள்கள் மதிப்பீட்டு பணி
சென்னை: பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பான விடைத்தாள்கள் மதிப்பீட்டு பணிகளை, எப்போது துவங்கி, எந்த தேதியில் முடிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை கால அட்டவணை வழங்கியுள்ளது.அதன்படி, பிளஸ் 1ல் அரியர் மாணவர்களுக்கு, ஏப்ரல் 6ம் தேதியும், நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கு, ஏப்ரல் 15ம் தேதியும், மதிப்பீட்டை துவங்கி, ஏப்ரல் 25ல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.பிளஸ் 2வுக்கு ஏப்ரல் 1ல் மதிப்பீடு துவங்கி, 13லும்; 10ம் வகுப்புக்கு, ஏப்., 13ல் துவங்கி, ஏப்., 22ம் தேதிக்குள்ளும் முடிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.