நுால் வெளியீட்டு விழா
நத்தம்: துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பாலகிருஷ்ணன் எழுதிய அக்னித் தோட்டம் நுால் வெளியீட்டு விழா நடந்தது.முதன்மை கல்வி அலுவலர் நாசுருதீன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பால்ச்சாமி முன்னிலை வகித்தார். உதவி தலைமையாசிரியர் வீரமணி வரவேற்றார். பள்ளி கல்வி இணை இயக்குநர் ஜெயக்குமார் நுாலை வெளியிட நத்தம் பேரூராட்சித் தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா பெற்றுக்கொண்டார்.நூலாசிரியர் சிவபாலா பேசினார். தலைமை ஆசிரியர்கள் ஜிம்சன் திருநாவுக்கரசு, சாத்தாவு, அருள் ஜோசப் ஜாலி, பள்ளி மேலான் மைக்குழு தலைவர் கலைவாணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொன்னழகன், கலந்து கொண்டனர். உதவி தலைமையாசிரியம் பாக்கியம் நன்றி கூறினார்.