உள்ளூர் செய்திகள்

வெளிநாட்டினருக்கு மொழிபெயர்ப்பு பயிற்சி

சென்னை: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், வெளிநாட்டினருக்கு சங்க இலக்கிய மொழிபெயர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், கி.பி., ஆறாம் நுாற்றாண்டுக்கு முற்பட்ட இலக்கியங்கள் குறித்த ஆய்வுகள் நடக்கின்றன. அதே காலகட்டத்தைச் சேர்ந்த இலக்கியம், இலக்கணம், மொழியியல், வரலாறு, நுண்கலைகள், கட்டடக்கலை, தொல் பொருளியல், நாணயவியல், கல்வெட்டியல், சுவடியியல், பண்பாடு, மொழிபெயர்ப்பு உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த ஆய்வுகளும், கருத்தரங்குகளும் நடக்கின்றன.அவை குறித்து, பனாரஸ் ஹிந்து பல்கலை, டில்லி பல்கலை, விஸ்வ பாரதி பல்கலை மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அத்துடன், தமிழ் இலக்கியங்களை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கும் வகையில், வெளிநாட்டினருக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதில், தமிழ் கலைச்சொல் உருவாக்கம், தமிழ் சூழலை உணர்ந்து மொழிபெயர்க்கும் உத்திகள் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் துவக்கமாக, ஏப்ரல் முதல் வாரம், மலேஷியாவைச் சேர்ந்த 25 பேராசிரியர்களுக்கு ஐந்து நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதை, மலேஷிய தமிழ் மொழி காப்பக பேராசிரியர்களான செல்வஜோதி ராமலிங்கம், ஜெயகுமாரி ஆகியோர் ஒருங்கிணைக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்