உள்ளூர் செய்திகள்

எம்.எஸ்.எம்.இ.,யில் பயிற்சி வகுப்புகள்

மதுரை : மதுரை புதுார் தொழிற்பேட்டை எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் ஏற்றுமதி இறக்குமதி குறித்த பயிற்சி வகுப்பு மே 4, 5ல் நடக்கிறது. பயிற்சி நேரம் காலை 10:00 - மாலை 5:00 மணி. உலர் பழங்கள் தயாரிப்பு பயிற்சி மே 6 முதல் 10 வரை காலை 10:00 - மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.இப்பயிற்சிகளுக்கான கட்டணம் ரூ.3540. இதில் ஏற்றுமதி பயிற்சிக்கான நடைமுறைகள், பாதுகாப்பு, பொருட்களை அனுப்புவதற்கான வழிமுறைகள் குறித்தும் உலர் பழங்கள் தயாரிப்பு பயிற்சி செய்முறையுடனும் அளிக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 86956 46417, 86670 65048ல் பெயர்களை பதிவு செய்யலாம் என ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்