ஆன்லைனில் எம்.பி.ஏ., படிப்பு
சென்னை: சென்னை ஐ.ஐ.டி., யில், கடல்சார் தொடர்பாக, கடல்சார் டிஜிட்டல் மற்றும் சப்ளை செயின் என்ற, ஆன்லைன் எம்.பி.ஏ., படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதற்கான விண்ணப்ப பதிவுகள், ntcpwc.iitm.ac.in/dmscmba/ என்ற இணையதளத்தில் துவங்கியுள்ளன. பட்டப்படிப்பு முடித்தோர், ஆகஸ்ட், 15க்குள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கும் என, ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி தெரிவித்துஉள்ளார்.நீட் தேர்வு முறைகேட்டால், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான கவுன்சிலிங் தாமதமாகி வருகிறது. எனவே, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவ படிப்புகள், யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையை ஜூலையில் துவங்க, மக்கள் நல்வாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது. கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையும் அடுத்த மாதம் துவக்கப்பட உள்ளது.