உள்ளூர் செய்திகள்

உண்ணாவிரத போராட்டம்

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.இப்பல்கலையில் நிலவும் நிதிப்பற்றாக்குறை பிரச்னையால் பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு இம்மாதம் இதுவரை சம்பளம் வழங்கவில்லை. இதுபோல 1200க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கும் ஜூலை ஓய்வூதியம் வழங்கவில்லை. ஆடிட் அப்ஜெக்ஷன்களை காரணம் காட்டி ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்க முடியாது.ஓய்வூதியம் கிடைக்காததை கண்டித்து சங்கத் தலைவர் சீனிவாசன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. செயலாளர் சாமிநாதன், துணைத் தலைவர் ஜபாருல்லா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்