உள்ளூர் செய்திகள்

திறமைகளை பரிசோதித்த கண்காட்சி

வத்தலக்குண்டு: தனியார் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சி அனைவரையும் கவர்ந்தது.மாணவர்களை படி படி என்று பயிற்றுவிக்காமல் தனித்திறன்களை வளர்த்தல் மூலம் அவற்றை செயல்முறைப்படுத்தி கற்றல் திறனை அதிகரித்து பிறரிடம் உரையாடும் திறனை வளர்த்தலில் பள்ளி ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகுக்கின்றனர். இந்த நவீன யுகத்தில் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டா, எக்ஸ், யூடியூப் போன்ற பொழுதுபோக்கு வலைதளங்களில் இருந்து மாணவர்களை திசை திருப்புதல் என்பது பெற்றோர், ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. மாணவர்களை அவர்கள் பாணியிலே புத்தக பாடங்களை நடத்துவது என்பது மற்றொரு சவாலாக உள்ளது. இதை சமாளிப்பதே மிகப்பெரிய சவாலாக உள்ள இக்காலகட்டத்தில் வத்தலக்குண்டு மவுன்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மாணவர்களின் திறன் வளர்த்தல் மூலம் புத்தகப் பாடங்களை புரிந்து படிக்க வைத்து வெற்றி காண்பதை தலையாய கடமையாக செய்து வருகிறது. இப்பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியே இதன் நோக்கத்தை பிரதிபலிப்பதாக இருந்தது.கே.ஜி. மாணவர்களின் ஆங்கில உரையாடலை மழலை குரலில் கேட்கும் போது நமக்கே ஆச்சரியமாக தான் உள்ளது. இப்பள்ளி ஆசிரியர்களின் கடுமையான உழைப்பை இம்மலழைகளின் பேச்சிலிருந்து அறிய முடிகிறது. பெற்றோர் ,தங்களது குழந்தைகளிடம் இவ்வளவு திறன் இருக்கிறதா என்று ஆச்சரியப்படும் வகையில் கண்காட்சி அமைந்திருந்தது.இதோடு கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்களின் ஆங்கில அறிவு திறனும், பேசும் திறனும் கண்காட்சிக்கு வந்திருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது.மகிழ்ச்சி தந்த கண்காட்சிரிபா தனுசியா, 7 ம் வகுப்பு: கண்காட்சியில் திறன்களை வெளிப்படுத்தியது மகிழ்ச்சியாக இருந்தது. எங்களுடைய திறமைக்கு ஒரு சவாலாக இக்கண்காட்சி அமைந்திருந்தது. ஒவ்வொரு மாணவர்களும் அவரவர் திறமையினை குழுவாக வெளிப்படுத்தியது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. வகுப்புகளை புறக்கணிக்காமல் திறன் வளர்த்தல் வகுப்பிலே கண்காட்சி நடத்தியதும் பெற்றோர்களுக்கு புதுமையாக தெரிந்தது.பாடங்களை புரிந்து படிக்க வழிபி. புகழேந்தி, 8ம் வகுப்பு : கண்காட்சி மூலம் எங்களிடம் என்ன திறன் உள்ளது என்பதை அறிய முடிந்தது. யார் யாரிடம் எப்படி பேசுவது என்பதும் தெரிந்து கொண்டோம். பாடங்களை ஆழமாக புரிந்து படிப்பதற்கு உதவியாக இந்த கண்காட்சி பயன்பட்டது. ஆங்கில புலமையையும் எங்களை நாங்களே சுய பரிசோதனை செய்து கொண்டோம். பெற்றோர்கள் முன்பாக பேசியது, குழுவாக இணைந்து செய்தது என பல்வேறு முயற்சிகள் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.பெருமையாக உள்ளதுதினேஷ், திவ்யா, பெற்றோர்: எங்களுக்கு இது போன்ற வாய்ப்பு அமையவில்லை. கல்லுாரியில் படிக்கும் போது தான் வாய்ப்பு அமைந்தது. தற்போது பள்ளியிலே கிடைப்பது மிகப் பெருமையாக உள்ளது. தனித்திறன்களை வளர்த்தல் என்பது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமாக உள்ளது. பள்ளிப்படிப்பை தவிர மாணவர்களிடம் எத்தகைய திறன்கள் இருக்கிறது என்பதை எங்களால் இதன் மூலம் அறிய முடிந்தது. ஆசிரியராக ஒரு மாணவருக்கு புரிய வைத்தல் என்பது பெரிய மெனக்கெடலாக இருக்கும். இச் சூழலில் கண்காட்சி நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்தது.சாதித்து விட்டனர்ஆத்தியப்பன், பள்ளி முதல்வர்: ஒவ்வொருவருடைய கற்பனைத் திறன் அறிவுத்திறன் வளர்த்துக் கொள்வதற்கு இக்கண்காட்சியை பயன்படுத்திக் கொண்டனர். நிலநடுக்கம் ஏற்படுவது, தாவரங்கள், மூலிகைகளின் பயன்பாடு, கொழுப்பு உருவாகும் விதம் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என பல்வேறு தலைப்புகளில் கண்காட்சியை மாணவர்கள் சிறப்பாக நடத்திக் காட்டி சாதித்து விட்டனர்.மிகப்பெரிய வெற்றிநோரிஸ், நடராஜன்-லின்னி, பள்ளி தாளாளர் : கிராம மானவர்களுக்கு அதிக நிதிச்சுமை ஏற்படாத வண்ணம் உள்ளூரில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்பங்களை செய்து காட்டி அசத்தி விட்டனர். மொழி திறமைக்கு எங்கள் பள்ளியில் தனி கவனம் மேற்கொள்வதால் இக்கண்காட்சி தன்னம்பிக்கையை ஏற்படுத்தியதோடு பிறரிடம் எவ்வாறு எளிதாக உரையாடுவது என கற்றுக் கொண்டனர். பெற்றோரும் மாணவர்களின் அறிவுக்கூர்மையை வெகுவாகப் பாராட்டினர். இதுவே பள்ளிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்