டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள, 55 அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்களுக்கான முதன்மை தேர்வு, டிசம்பர் 14ல் நடக்கும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.இதற்கு, பி.எல்., முடித்து, பார் கவுன்சில் உறுப்பினராகி கிரிமினல் நீதிமன்றங்களில் ஐந்து ஆண்டு களுக்கு மேலாக வழக்கு நடத்திய அனுபவம் உள்ள, 26 - 36 வயதுடையோர், அடுத்த மாதம் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவல்களுக்கு, https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.