ஏ.ஐ., சிறப்பு மையங்கள்
சுகாதாரம், வேளாண்மை, நிலைத்தன்மை நகரங்கள் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு பிரிவில் மூன்று சிறப்பு திறன் மையங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.உலகளாவிய செயற்கை நுண்ணறிவு சந்தையில் இந்தியாவின் வளர்ச்சியை வெகுவாக வலுப்படுத்தப்படுத்த உதவுவதோடு, சர்வதேச அளவிலான சிக்கல்களுக்கும் தீர்வு வழங்கும் மையங்களாக அவை விளங்கும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார்.ரூ.990 கோடி ஒதுக்கீட்டில் துவங்கப்படும் இந்த மையங்களால், நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் இருந்து திறன்மிக்கவர்கள் அதிகளவில் உருவாக்கப்படுவதோடு, வேலை வாய்ப்புகளும் கணிசமாக அதிகரிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.