தொழில்நுட்ப புத்தாக்கத்திற்கு பரிசு
சணல் நூல் உற்பத்திக்கான புத்தாக்க சிந்தினையுடன் கூடிய தொழில்நுட்ப யோசனைக்கு, தேசிய சணல் வாரியத்தால் 'டெக்னாலிஜிக்கல் இன்னோவேஷன் கிராண்ட் சேலஜ் 2024' எனும் போட்டியின் கீழ், பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.யார் விண்ணப்பிக்கலாம்?:புதுமையான யோசனைகளைக் கொண்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், தனிநபர் விண்ணப்பிக்கலாம்.பரிசுத் தொகை:தேர்வு செய்யப்படும் சிறந்த புத்தாக்க திட்டத்திற்கு முதல் பரிசாக ரூ. 5 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ. 3 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 1 லட்சமும் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் முறை: ஸ்டார்ட்-அப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 31விபரங்களுக்கு:இமெயில் - startup.support@investindia.org.inஇணையதளம்: www.startupindia.gov.in