உள்ளூர் செய்திகள்

பிஎச்.டி., மாணவர் சேர்க்கை

* தஞ்சாவூரில் உள்ள 'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் புட் டெக்னாலஜி, ஆன்ட்ர்பிரனர்ஷிப் அண்டு மேனேஜ்மெண்ட்' எனும் கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.இந்திய அரசின் புட் புராசசிங் இண்டஸ்ட்ரீஸ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இக்கல்வி நிறுவனம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவன அந்தஸ்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.படிப்பு: பிஎச்.டி.,- புட் டெக்னாலஜிபிரிவுகள்: புட் புராசஸ் இன்ஜினியரிங், புட் புராசஸ் டெக்னலாஜி, புட் சேப்டி அண்டு குவாலிட்டி அஸ்சூரன்ஸ்தேர்வு செய்யப்படும் விதம்: இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மதிப்பெண்கள், ஆய்வு தாள்கள், அனுபவம், 'கேட்' அல்லது என்.ஐ.எப்.டி.இ.எம்.,-டி நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.தேர்வு செய்யப்படும் அனைத்து சிறந்த மாணவ, மாணவிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 25விபரங்களுக்கு: https://niftem-t.ac.in/* சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜனவரி 2025ல் துவங்கும் பகுதி நேர மற்றும் முழு நேர பிஎச்.டி., படிப்பிற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.துறைகள்: தமிழ், ஆங்கிலம், கல்வியியல், வரலாறு, சமூகவியல், விலங்கியல், புவியியல், வேதியியல், தாவரவியல், இயற்பியல், மேலாண்மை, அரசியல் அறிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக் மீடியா ஸ்டடீஸ், கிரிமினாலஜி அண்டு கிரிமினல் ஜஸ்டீஸ் அட்மினிஸ்ட்ரேஷன, டிராமா அண்டு தியேட்டர் ஸ்டடீஸ். தகுதிகள் குறித்த விரிவான தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 31விபரங்களுக்கு: https://tnou.ac.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்